அப்டேட் செய்யாத ஆண்டிவைரசும் ஆம்ளெட் போடாத தோசையும் வீண் தாங்க. வாங்க நண்பர்களே எப்படி நம்ம டிஃபெண்டரை ஆஃப் நிலையில் புதுப்பிப்பது எனக்காண்போம்.
தீங்கொல்லிகளில் சிறந்த இலவச தீங்கொல்லியாக விண்டோஸ் டிஃபெண்டரை சென்ற பதிவில் பார்த்தோம்.
“Windows
Defender Update” என கூகுளில் தட்டச்சிட்டு தேடினால் உங்களுக்கு
தீங்கொல்லிகளில் சிறந்த இலவச தீங்கொல்லியாக விண்டோஸ் டிஃபெண்டரை சென்ற பதிவில் பார்த்தோம்.
சில பேர்
இணைய இணைப்பில்லாமலே கணினி பயன்படுத்துவர். அவர்கள் எவ்வாறு தம் தீங்கொல்லியை Offlineஇல்
புதுப்பிக்கலாம் எனக்காண்போம்.
இதற்கு
உங்கள் கணினி இணையத்துடன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள்
இதனை உங்கள் அலைபேசியிலோ அல்லது வேறொரு கணினியில் கூட பதிவிறக்கி கீழ்க்கண்ட முறையில்
புதுப்பிக்கலாம்.
படி
1:
கீழ்க்கண்டவாறு கிடைக்கும்
படி
2:
அதில்
“Get the latest definitions” என்பதை தெரிவு செய்க. இதில் சென்ற பின் உங்களின் இயக்கமுறைமைக்கு
ஏற்ப பதிவிறக்குக் கொள்ளலாம். அதிகமானோர் 32 பிட் வகை கணினிகளையே பயன்படுத்துவதால்
நாம் விண்சோஸ் 8 32 பிட் கணினி வகையையே கீழ்க்கண்டவாறு தெரிவு செய்வோம்.
படி
3:
இவ்விணைப்பை
தெரிவு செய்த பின் அதனை தரவிறக்க ஆரம்பிக்கும்.
தரவிறக்கிய
பின் கீழ்க்காணும் வகையில் உங்களுக்கு ஒரு மென்பொருள் கிடைக்கும்.
படி 4:
இப்போது இதனை உங்களது
கணினியில் இருமுறை திறந்து நிறுவிக்கொள்ளுங்கள், இந்நிறுவல் காலாவதியான உங்கள் டிஃபெண்டரை
புதுப்பித்திருக்கும்.
(குறிப்பு:
இம்மென்பொருளினை நிறுவும்பொது எவ்வித நிறுவல் காட்சியையும் திரையில் காண்பிக்காது)
தமிழ் அறிவோம்:
தீங்கொல்லி - Antivirus
புதுப்பித்தல் - Update
காலாவதி - Expired
0 comments:
Post a Comment