Pages

Subscribe:

Monday, 18 August 2014

உபுண்டு 14.04 LTSஐ விண்டோசுடன் நிறுவுதல்


   
 
       லினக்ஸ் வழங்கிகளில் மிகவும் பிரபலமான வழங்கி உபுண்டு ஆகும். LTS என்பதுLong Time Support” எனப்பொருள் படும். அதாவது LTS என அறிமுகப்படுத்தப்படும் அனைத்து Ubuntu வழங்கல்களும் 5 வருடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பெறும்.
அவ்வகையில் உபுண்டு 14.04 LTS ஆனது 17ஆம் தேதி ஏப்ரல் மாதம் 2014இல் வெளியானது. இதனை எப்படி விண்டோஸ் 7/8/8.1இல் நிறுவுவது எனக்காண்போம்.

தேவையானவை:

  • 4 ஜிபி அளவுள்ள பெண்டிரைவ்
  • LiLi USB Creator மென்பொருள்
  • உபுண்டு 14.04 LTS.ISO 

     படி 1:

     
        கீழ்க்கண்ட இணைப்பில் சென்று LiLi USB Creator & உபுண்டுவையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

     Download Ubuntu

    Download LiLi USB Creator


    படி 2:

      LiLi USB Creator மென்பொருளை விண்டோஸ் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

    படி 3:

       பின் அம்மென்பொருளைத் திறந்தீர்களேயானால் கீழ்க்கண்டவாறு கிடைக்கும். பின் கீழ்க்காணும் படத்தின் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.




    படி 4:

      இனி 100 சதவீதம் வரும் வரை காத்திருங்கள்.
      

    படி 5:

      இனி ஒரு 10 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் கணினி வந்தட்டை அமைக்கவும். எப்படி வந்தட்டைப் பிரிப்பதென இந்தபதிவில் சென்று காணுங்கள்.

    படி 6:

     கணினி துவங்கும் போது F12 அழுத்டுங்கள். (இது கணினி தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும். நான் கொடுத்துள்ளது Acer மடிக்கணினிகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் தகவலுக்கு இப்பதிவின் கீழ் உங்கள் கணினி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பின்னூட்டமிடுங்கள் {Comment}).

    படி 7:

      இனி வரும் விண்டோவில் Ubuntu Live தேர்ந்தெடுங்கள். இனி கீழ்க்கண்டவாறு கிடைக்கும்.
      
     
    பின் Install Ubuntu 14.04 LTS என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

    படி 8:

      இனி வரும் சாளரத்தில் மொழியைத் தேர்ந்தெடுத்துInstall Ubuntu” என்பதனைத் தேர்தெடுங்கள்.
      


படி 9:

  பின்Continue” கொடுங்கள்.


படி 10:

  இனி வரும் சாளரத்தில்Something else” என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின் அடுத்து கொடுங்கள்.

படி 15:

படி 11:

  அடுத்து நீங்கள் வன் தட்டில் பிரித்த 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஜிபியை தெரிவு செய்யுங்கள்.

 
பின்Change” என்பதைத் தேர்ந்தெடுத்தீர்களேயானால் அதில் கீழ்க்கண்டவாறு ஒரு சாளரம் கிடைக்கும். அதில் Use As என்பதில்Ext4 journaling file system” என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பின்Mounting Point” என்பதில் \ ஐத்தெரிவு செய்துகொண்டு OK கொடுங்கள்.


படி 12:

  இனி வரும் வரைபடத்தில் இந்தியாவை தேர்வு செய்து கொண்டு Continue கொடுங்கள்.

 

படி 13:

  Keyboard layout-இல் உங்கள் விருப்ப மொழியைத் தெரிவு செய்து கொண்டு அடுத்து கொடுங்கள்.
படி 15:

 

படி 14:

  இனி “User Profile”-ஐ பூர்த்தி செய்து அடுத்து கொடுங்கள்.

படி 15:

  அவ்வளவு தான். இனி ஒரு 15 நிமிடம் நிறுவும் வரை காத்திருக்கவும்.

நிறுவுவதில் ஏதேனும் சந்தேகமிருப்பின் பின்னூட்டமிடுங்கள்.


0 comments:

Post a Comment