Pages

Subscribe:

Monday, 18 August 2014

விரைவாக கணினியை நிறுத்த



      விண்டோஸ் கணினியை நிறுத்த பல பேர் பல வழிமுறைகளை பின்பற்றுவர். கீழ்க்காணும் முறை கணினியை மிக விரைவில் கணினியை நிறுத்த உதவும்.
முதலில் உங்கள் கணினியின் திரைப்பலகத்தில் (Desktop) செல்லுங்கள். பின் வலது புறம் சொடுக்கி ”New”-வை சொடுக்கி அதில் “Shortcut” என்பதைத் தேர்ந்தெடுங்கள்.



இனி புதிதாக திறக்கப்படும் சாளரத்தில் கீழ்க்காணும் சொற்களை உள்ளிடுங்கள்.
Shutdown /s /t 0””



 
பிறகு அடுத்து (Next) கொடுங்கள். பிறகு “முடி” என்பதை சொடுக்குங்கள்.

இப்போது கீழ்க்காணும் வகையில் உங்களுக்கு ஒரு குறுக்குவழி கிடைத்திருக்கும். இப்போது இதனை தேர்ந்தெடுத்து வலதுபுறம் சொடுக்கி “குணங்கள்” (Propertise)-க்குள் செல்க.



இதில் “படவுருவை மாற்று” (Change Icon) என்பதைத் தேர்ந்தெடுத்து கீழ்க்காணும் ப்டவுருவை சொடுக்கி “OK” கொடுங்கள்.



அடுத்து


 
அவ்வளவு தான். இனி கீழ்க்காணும் வகையில் உங்களுக்கு ஒரு குறுக்குவழி (Shortcut) கிடைத்திருக்கும்.




இதனை இருமுறை சொடுக்கினால் கணினி நிறுத்தப்படும்.
ஏதேனும் சந்தேகமிருப்பின் பின்னூட்டமிடுங்கள். நன்றி!!!


0 comments:

Post a Comment