ஒன்றுக்கும்
மேற்பட்ட வட்டுக்களை உருவாக்க
பார்டீசியன் முறை உதவும்.
புதிதாக
லினக்ஸ் இயங்குதளம் நிறுவ
வேண்டுமென்றாலும் நாம்
பார்டீசியன் பிரித்துத் தான்
ஆக வேண்டும்.
லினக்ஸ்
இயங்குதளம் நிறுவும் முறை
பற்றி பிரிதொரு பதிவில்
காணலாம். இப்போது
எப்படி பார்டீசியன் பிரிப்பது
என்று பார்ப்போம்.
இயல்பாகவே
பார்டீசியன் பிரிக்க Disk
manager எனும்
மென்பொருள் விண்டோஸ் 7,
விஸ்டா
மற்றும் 8இல்
அமைந்திருக்கும்.
இதற்காக
நாம் புதிதாக எந்த மென்பொருளையும்
கணினியில் நிறுவத்தேவையில்லை.
- முதலில் உங்கள் கணினியை இடப்பக்கமாக சுட்டி, அதில் Manageஐ தேர்ந்தெடுங்கள்.
என்னுடைய
வன் தட்டில்(
Hard Disk) மூன்று
இயங்குதளங்கள் நிறுவியுள்ளதால்
எனக்கு இவ்வளவு பார்டீசியன்கள்
பிரிக்க நேர்ந்த்து.
ஆனால்
அனைத்துக் கணினிகளிலும்
பொதுவாக மூன்று அல்லது நான்கு
பார்டீசியன்கள் இருக்கும்.
நீங்கள்
பிரிக்கவிருக்கும் வட்டை
தேர்ந்தெடுத்து வலதுபுறம்
சுட்டி அதில் Shrink
Volumeஐ
தேர்ந்தெடுங்கள்.
1
ஜிபி =
1024 எம்பி
என்கிற அளவிற்கேற்ப நீங்கள்
10 ஜிபி
பிரிக்க வேண்டுமெனில் 10240
எம்பி என
வரும் விண்டோவின் Enter
the amount of space to shrink in MB எனும்
இடத்தில் shrinkஐ
கொடுங்கள்.
அவ்வளவு
தான். தங்களது
வன்தட்டு பிரித்தாகிவிட்டது.
இனி வரும்
பதிவில் லினக்ஸ் பற்றியும்
, அதில்
கலி லினக்ஸின் பயன்பாடு
மற்றும் கணினியில் நிறுவும்
முறையையும் காணலாம்.
0 comments:
Post a Comment