Pages

Subscribe:

Wednesday, 18 June 2014

தமிழில் தொழில்நுட்பம் –ஒரு பார்வை:


தொழில்நுட்ப வகைகளில் தமிழ் மிக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இடம் என்றால் அது கணினித்துறை தான் என அடித்துச்சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு கணினியில் தமிழ் முன்னேற்றம் அடைந்துள்ளது. இவையாவும் கணினித்துறையில் தமிழ்ப்புரட்சியை ஏற்படுத்திய கணினி அறிஞர்களையே சாரும். சாதாரண அலைபேசியில் இருந்து ஐபோன் வரை அனைத்திலும் வந்துவிட்டது. அது மட்டுமா விண்டோசை எடுத்துக்கொண்டால் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பு, இணைய உலாவி, அஞ்சல் என முழுக்கணினியையும் தமிழிலும் காணும் வகையில் தொழில்நுட்பம் வந்துவிட்டது.


இத்தனையிலும் வந்து என்ன பயன்?
எவரேனும் தமிழில் கணினியை பயன்படுத்துகிறீரா? தமிழகத்தில் அப்படி உள்ளவரை கைவிரலில் எண்ணி விடலாம். ஏனெனில் மிக மிகச்சிலரே உள்ளனர்.
சரி. ஏன் மற்றோர் தமிழில் கணினியை பயன்படுத்த ,மறுக்கின்றனர்?
இதற்காக இவர்கள் கூறும் சொற்கள் அற்பமானவை. தமிழில் பயன்படுத்துவது கடினம், அதுவுமில்லாமல் ஒன்னுமே புரியாது என. இன்னும் சிலர் இவர்களைவிட ஒருபடி மேலே போய், தமிழ்ல யாரோச்சும் கம்ப்யூட்டர பயன்படுத்துவாங்களா? பார்க்க நல்லாவா இருக்கும்?னு கேக்குறானுக.
ஆக தமிழரே தமிழைப் புறக்கணித்தால் தமிழின் நிலை என்னவாகும்?
கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தாய்மொழியை நீங்கள் கற்காவிட்டால் வேறு யார் வந்து கற்றுக்கொள்வார்கள்.


அட கணினித்துறை பரவாயில்லை பல மடங்கு தமிழினை தன் துறையில் முன்னேற்றிவிட்டது. ஆனால் பிற துறைகளில் தமிழ் சுத்தமாக இல்லை. அவையாவன,
  1. மின்னியல்
  2. இயந்திரவியல்
  3. மின்னணுவியல்
  4. கட்டிடவியல்
  5. தகவல் தொடர்பியல்
இன்னும் பல துறைகளில் தமிழ் சுத்தமாகவே நடைமுறையில் பயன்படுத்துவது இல்லை.
தமிழ் மிக பழமையானது, செம்மை மிகுந்தது என நாம் கூறிக்கொண்டாலும், தற்சமயம் பயன்பாட்டில் இல்லை என்றால் அது நம் மொழிக்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

0 comments:

Post a Comment