விண்டோசை
போன்று லினக்சும் ஒரு இயங்குதளமே.
லினக்ஸ்
இயங்குதளமானது யுனிக்சை
சார்ந்து வடிவமைக்கப்பட்டது.
அது
என்னங்க யுனிக்ஸ் ?
யுனிக்ஸ்
என்பதுவும் ஒரு வகை இயங்குதளமே.
நீங்க
அதிகமா கேள்விப்பட்டு
இருப்பீர்கள்.
அதானுங்க
ஆப்பிள் போன்.
ரொம்ப
ரிச்சான போன்.
அதுவும்
யுனிக்சின் அடிப்படையில்
தானுங்க இயங்குது.
லினக்ஸ்
திறவுமூல மென்பொருளின் கீழ்
வருவதால் இதனை யார் வேண்டுமானாலும்
திருத்தி மறுவடிவம் பெற
செய்யலாம்.
மேலும்
இது முழுக்க முழுக்க இலவசம்.
இதன்
காரணமாகவே இன்று லினக்ஸ் பல
வழங்கல்களை பெற்றுள்ளது.
உதாரணமாக
உபுண்டு, ஃபெடோரா
இன்னும் பல இயங்குதளங்களைக்
கூறலாம்.
- லினக்ஸ் இலவச இயங்குதளம். அதில் உள்ள மென்பொருட்களும் இலவசம் தான்.
- தீங்கொல்லி (வைரஸ்) பிரச்சனையே வராது
விண்டோசைக் காட்டிலும் படுவேகமான லினக்ஸ் - இயங்கும் வேகம் நிலையானது. உதாரணத்துக்கு நீங்கள் 1990களில் நிறுவியிருந்தாலும் இப்பொழுது வரை அதன் வேகம் குறையாது. ஆனால் விண்டோஸ் அப்படி இல்லையே.
- அடிக்கடி ஹேன்ங் ஆவதெல்லாம் லினக்சில் சாத்தியமே இல்லை.
- விண்டோசைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது.
- இணையப்பயன்பாட்டின் வேகம் லினக்சில் அதிகம். ஏனெனில் நம்முடைய அனுமதியில்லாமல் தன்னையோ அல்லது அதன் மென்பொருட்களையோ அப்டேட் செய்யாது. இதிலும் லினக்சிடம் விண்டோஸ் தோற்றுப்போகிறது.
- நமக்கேற்ற வண்ணம் லினக்ஸை மாற்றிக்கொள்ளலாம்.
என்ன
வாசகர்களே உங்களுக்கும்
லினக்ஸ் பயன்படுத்தணும்னு
ஆர்வமா இருக்கா?
தொடர்ந்து
இணைந்திருங்கள்.
விரைவில்
கலி லினக்ஸ் நிறுவும் முறை
பற்றி பார்ப்போம்.
0 comments:
Post a Comment