Pages

Subscribe:

Wednesday, 18 June 2014

விண்டோஸ் 8-ஐ தமிழ்மயமாக்கல்


நம் விண்டோஸ் 8 கணினி முழுவதையும் இப்பொழுது தமிழ் மயமாக்கலாம். இதற்கு விண்டோஸ் 8-இன் இடைமுகப்பு மென்பொருள் தேவைப்படும். இம்மென்பொருள் பெற கீழ்க்காணும் இணைப்பில் சென்று பதிவிறக்கிக் கொள்ளுங்கள்
 
https://www.dropbox.com/s/0xth1nvrf0qt0py/windows%208%20tamil.mlc
 
தரவிறக்கிய பின்பு அதனை கீழ்க்காணும் முறையில் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.





நிறுவிய பின் Windows+C அழுத்தி Settingsக்குள் செல்லுங்கள்.


அதை அழுத்தியவுடன் கீழ்க்கண்டவாறு கிடைக்கும். அதில் Control Panel செல்லுங்கள்.


இனிவரும் விண்டோவில் Language என்பதனுள் செல்லுங்கள்.



Language- தெரிவு செய்த பிறகு கீழ்க்கண்டவாறு ஒரு விண்டோ கிடைக்கும். அதில் Add Language என்பதை தெரிவு செய்யுங்கள்.




இனி வரும் விண்டோவில் நம் தமிழ் மொழியை கண்டறியுங்கள். கீழ்க்கண்டவாறு கிடைக்கும்.




இதனை திறந்து தமிழ்(இந்தியா) என்பதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பின் இது போன்று கிடைக்கும். இதில் நம் தமிழ் மொழி இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.



பிறகு படத்தில் காட்டியுள்ளவாறுOptions” செல்க. இதில் make this primary Language என்பதை சொடுக்குங்கள்.

  




இனி கணினி லாக் ஆஃப் செய்யக் கேட்கும். ஆம் கொடுத்து லாகின் ஆனால் விண்டோஸ் 8 முழுதும் தமிழ்மயமாகியிருக்கும்.



 
இனி கொஞ்சம் வித்தியாசமாய் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் கணினியை பயன்படுத்தி மகிழுங்கள்..
தொடர்ந்து இணைந்திருங்கள். மீண்டும் அடுத்த ஒரு பதிவில் பார்க்கலாம் வாசகர்களே
ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கருத்துக்களில் இடுங்கள். நன்றி!!!

0 comments:

Post a Comment