(குறிப்பு:
நான்
கணினியை முழுதும் தமிழ்மயமாக்கியுள்ளேன்.
நீங்கள்
தமிழில் அறிய கடினப்பட்டால்
இப்பதிவின் இறுதியில் உள்ள
அருஞ்சொற்பொருளை காணவும்)
விண்டோஸ்
கணினியை பயன்படுத்தினாலே
அதில் வரும் பெரிய பிரச்சனை
வைரஸ் தான்.
இதை ஒழிக்க
நிறைய பேர் பல மடங்கு விலை
கொடுத்து தீங்கொல்லி மென்பொருட்களை
(Avast, K7, Kaspersky போன்ற)
வாங்குகின்றனர்.
இந்தச்செலவு
தேவையற்றது.
இருக்கவே
இருக்கிறது விண்டோசின் இலவச
தீங்கொல்லி “Windows
Defender”. இது
விண்டோஸ் 7 &
8 உடன்
இலவசமாகவே வருகிறது.
இதை
எப்படி பயன்படுத்துவதென நாம்
காண்போம்.
முக்கியம்:
நீங்கள்
ஏதேனும் தீங்கொல்லி மென்பொருளை
ஏற்கெனவே நிறுவியிருந்தால்
அதனை நீக்கிவிடுங்கள்.
அப்போது
தான் இதனை இயக்க இயலும்.
உங்கள்
கட்டுப்பாட்டுப் பலகத்தினை
(Control Panel) கீழ்க்காணும்
முறையில் Windows+X
அழுத்தி
திறந்து கொள்ளுங்கள்.