Pages

Subscribe:

Wednesday, 9 July 2014

யூடியூப் காணொலிகளை எளிதில் தரவிறக்க


                யூடியூப் காணொலிகளைத் தரவிறக்க பல வழிகள் உண்டு. அதில் வலைத்தளம் மூலம் பதிவிறக்கும் வழிகளும் உண்டு. ஆனால் அதில் பெரும்பாலானவை java நிரலை நிறுவினால் மட்டுமே பதிவிறக்க முடியும் என்ற வகையில் அமைந்திருக்கும். இங்கு நாம் காணவிருப்பவை எம்மென்பொருளும் இல்லாமல் காணொலிகளை பதிவிறக்கும் சிறந்த வழிகள்:

  1. Youtube in MP4:

www.youtubeinmp4.com எனும் இத்தளமானது எளிதில் யூடியூப் காணொலியை எம்பி4 வடிவத்திற்கு மாற்றி பதிவிறக்கிக் கொள்ளலாம். என்னுடைய மிக உகந்த பரிந்துரை இம்முறையே. ஏனெனில் இதில் காணொலிகளை மிக விரைவில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

தளத்தைப் பயன்படுத்தும் வழிமுறை:

                   ஏதேனும் உங்களுக்குப் பிடித்த காணொலியை யூடியூபில் திறந்து கொள்ளுங்கள். இப்போது அந்த காணொலியின் உரலியை முகவரி இடும் இடத்தில் சென்று பின்வருமாறு நகலெடுத்துக் கொள்ளவும்.