Pages

Subscribe:

Thursday 12 June 2014

கலி லினக்ஸ்-நிறுவும் முறை

கலி லினக்ஸ் என்பது டெபியனை அடிப்படையாகக் கொண்ட இயங்குதளமாகும். இது ஹேக்கிங்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட லினக்ஸ் வழங்கி. இப்போது கலி லினக்சினை எப்படி கணினியில் விண்டோசுடன் டுயல் பூட் முறையில் நிறுவுவது என்பதைக் காணலாம்.

 படி 1:
      முதலில் கீழ்க்காணும் இணைப்பில் சென்று kali 32 bit ISOவை டோரண்டிலோ அல்லது நேரடியாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
          
http://www.kali.org/downloads/
படி 2:
        பின் உங்கள் பென்டிரைவினை கணினியுடன் செருகிக் கொள்ளுங்கள். பின் Linux Live USB எனும் மென்பொருளை உங்கள்
கணினியில் நிறுவ வேண்டும். அந்த மென்பொருளைப் பெற கீழ்க்காணும் இணைப்பை சொடுக்குங்கள்.

www.linuxliveusb.com/downloads/?stable

படி 3:
       Linux Live USBயை பதிவேற்றி கணினியில் நிறுவிய பின்னர் அந்த மென்பொருளை இயக்குங்கள். கீழ்க்கண்டவாறு கிடைக்கும்.



இதில் choose your key என்பதில் உங்களது பென்டிரைவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 பின்
      ISO/IMG/ZIPஇ தெரிவு செய்து அதில் நீங்கள் பதிவேற்றிய கலி லினக்ஸை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் நெருப்பு போன்றிருக்கும் அந்த மெனுவில் அழுத்துங்கள்.
இது முடிவடைய சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்.

படி 4:
      இப்பொழுது உங்கள் யுஎஸ்பி பூட்டபிளாக மாறியிருக்கும்.
இந்தப் படி மிகவும் முக்கியமான ஒன்று. அது உங்கள் வன்தட்டினை 10 ஜிபி என்ற அளவில் பிரிக்க வேண்டும். அதற்கு
  பார்டீசியன் பிரிக்கும் முறை என்ற பதிவில் சென்று அறிந்து கொண்டு உங்கள் வன்வட்டை பிரித்துக்கொள்ளுங்கள். பிரித்துவிட்டு உங்கள் கணினியை மறுதுவக்கம்(Restart) செய்யுங்கள்.

படி 5:
     இப்போது உங்கள் பென்டிரைவ்வினை முதல் சாதனமாக பூட் செய்ய வேண்டும். இது கணினிக்கேற்பவேறுபடும்.




                               <..................பதிவு தொடரும்...................>
    

0 comments:

Post a Comment