Pages

Subscribe:

Wednesday 18 June 2014

சிறந்த இலவச தீங்கொல்லி (Anti-Virus) மென்பொருள்


(குறிப்பு: நான் கணினியை முழுதும் தமிழ்மயமாக்கியுள்ளேன். நீங்கள் தமிழில் அறிய கடினப்பட்டால் இப்பதிவின் இறுதியில் உள்ள அருஞ்சொற்பொருளை காணவும்)
விண்டோஸ் கணினியை பயன்படுத்தினாலே அதில் வரும் பெரிய பிரச்சனை வைரஸ் தான். இதை ஒழிக்க நிறைய பேர் பல மடங்கு விலை கொடுத்து தீங்கொல்லி மென்பொருட்களை (Avast, K7, Kaspersky போன்ற) வாங்குகின்றனர். இந்தச்செலவு தேவையற்றது. இருக்கவே இருக்கிறது விண்டோசின் இலவச தீங்கொல்லி “Windows Defender”. இது விண்டோஸ் 7 & 8 உடன் இலவசமாகவே வருகிறது.
இதை எப்படி பயன்படுத்துவதென நாம் காண்போம்.
முக்கியம்: நீங்கள் ஏதேனும் தீங்கொல்லி மென்பொருளை ஏற்கெனவே நிறுவியிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள். அப்போது தான் இதனை இயக்க இயலும்.
உங்கள் கட்டுப்பாட்டுப் பலகத்தினை (Control Panel) கீழ்க்காணும் முறையில் Windows+X அழுத்தி திறந்து கொள்ளுங்கள்.

 
திறந்து கொண்டு அதில் “Windows Defender” என்பதனை கீழ்க்கண்டவாறு திறங்கள்
 



இதில் திறப்பதில் ஏதேனும் பிழை ஏற்பட்டால் உங்களது பழைய தீங்கொல்லி இன்னும் அழிக்கப்படவில்லை என பொருள்படும். எனவே அழித்துவிட்டு விண்டோஸ் டிஃபெண்டரை திறக்க முயற்சியுங்கள்.





பின் உங்கள் கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது மிக மிக முக்கியம். பின் ”புதுப்பி” என்பதனை சொடுக்குங்கள். இது முடிந்த பிறகு மஞ்சள் நிறமிருந்த பார்கள் இப்போது பச்சை வண்ணத்தில் மாறியுள்ளதைக் காணலாம். பின் கணினியை முழுமையாக ஸ்கேன் செய்துவிட்டு உங்கள் கணினியை மறுதுவக்கம் செய்யுங்கள்.
சரி இனி எப்படி பெண்டிரைவை இம்மென்பொருள் கொண்டு ஸ்கேன் செய்வதென காண்போம். முதலில் உங்கள் பெண்டிரைவை கணினியினுள் பொருத்திக்கொள்ளுங்கள். பின் டிஃபெண்டரை திறந்து கொண்டு அதில் ”தனிப்பயன்” (Custom) என்பதை சொடுக்குங்கள்.






தெரிவு செய்த பிறகு “ஸ்கேன் செய்” என்பதை சொடுக்குங்கள். இப்போது ஒரு புதிய திரை திறக்கும். அதில் உங்கள் பெண்டிரைவை தேர்ந்தெடுத்து ஸ்கேன் செய்யுங்கள்.
தீங்குவிளைவிக்கும் மென்பொருள் இருப்பின் கிளீன் செய்ய கட்டளையிடும்.


மிக மிக முக்கிய குறிப்பு:

மாதம் ஒருமுறையாவது புதுப்பியுங்கள். இல்லையேல் இம்மென்பொருளின் வேலை செய்யும் திறன் குறையும்.


திறம்பட வேலை செய்யும் விண்டோஸ் டிபெண்டரானது பின்வருமாறு பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.



இன்றைய பதிவில் அருஞ்சொற்பொருள்:
  • கட்டுப்பாட்டுப்பலகம் – Control Panel
  • தீங்கொல்லி மென்பொருள் – Antivirus Software
  • இணைய இணைப்பு – Internet Connection
  • புதுப்பி – Update
  • தனிப்பயன் – Custom
  • தீங்கு விளைவிக்கும் மென்பொருள் – Virus



என்ன நண்பர்களே! இன்றைய பதிவு பயனுள்ளதாக இருந்ததா? நம்புகிறேன். பயன்படுமென்று..
அடுத்தவொரு இனிய பதிவில் காணலாம்.

0 comments:

Post a Comment