Pages

Subscribe:

Saturday 28 June 2014

Offlineஇல் விண்டோஸ் டிஃபெண்டரை புதுப்பித்தல்

அப்டேட் செய்யாத ஆண்டிவைரசும் ஆம்ளெட் போடாத தோசையும் வீண் தாங்க. வாங்க நண்பர்களே எப்படி நம்ம டிஃபெண்டரை ஆஃப் நிலையில் புதுப்பிப்பது எனக்காண்போம்.


தீங்கொல்லிகளில் சிறந்த இலவச தீங்கொல்லியாக விண்டோஸ் டிஃபெண்டரை சென்ற பதிவில் பார்த்தோம்.

Thursday 19 June 2014

பயனரின் கடவுச்சொல்லைக் கண்டறிதல் (Obtaining Userpassword) : (100% வேலை செய்யக்கூடியது)

1)   கூகுளில் சென்று கீழ்க்கண்ட வாக்கியத்தைத் தட்டச்சிட்டுத் தேடுங்கள்!
 micro login system v1.0


     2) இதில் ஏதேனும் இணைய தளத்தினை திறந்து கொள்ளுங்கள். இதில் அந்த தளத்தின் URLஇல் login.php என்பதனை

Wednesday 18 June 2014

விண்டோஸ் 8-ஐ தமிழ்மயமாக்கல்


நம் விண்டோஸ் 8 கணினி முழுவதையும் இப்பொழுது தமிழ் மயமாக்கலாம். இதற்கு விண்டோஸ் 8-இன் இடைமுகப்பு மென்பொருள் தேவைப்படும். இம்மென்பொருள் பெற கீழ்க்காணும் இணைப்பில் சென்று பதிவிறக்கிக் கொள்ளுங்கள்
 
https://www.dropbox.com/s/0xth1nvrf0qt0py/windows%208%20tamil.mlc
 
தரவிறக்கிய பின்பு அதனை கீழ்க்காணும் முறையில் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

சிறந்த இலவச தீங்கொல்லி (Anti-Virus) மென்பொருள்


(குறிப்பு: நான் கணினியை முழுதும் தமிழ்மயமாக்கியுள்ளேன். நீங்கள் தமிழில் அறிய கடினப்பட்டால் இப்பதிவின் இறுதியில் உள்ள அருஞ்சொற்பொருளை காணவும்)
விண்டோஸ் கணினியை பயன்படுத்தினாலே அதில் வரும் பெரிய பிரச்சனை வைரஸ் தான். இதை ஒழிக்க நிறைய பேர் பல மடங்கு விலை கொடுத்து தீங்கொல்லி மென்பொருட்களை (Avast, K7, Kaspersky போன்ற) வாங்குகின்றனர். இந்தச்செலவு தேவையற்றது. இருக்கவே இருக்கிறது விண்டோசின் இலவச தீங்கொல்லி “Windows Defender”. இது விண்டோஸ் 7 & 8 உடன் இலவசமாகவே வருகிறது.
இதை எப்படி பயன்படுத்துவதென நாம் காண்போம்.
முக்கியம்: நீங்கள் ஏதேனும் தீங்கொல்லி மென்பொருளை ஏற்கெனவே நிறுவியிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள். அப்போது தான் இதனை இயக்க இயலும்.
உங்கள் கட்டுப்பாட்டுப் பலகத்தினை (Control Panel) கீழ்க்காணும் முறையில் Windows+X அழுத்தி திறந்து கொள்ளுங்கள்.

தமிழில் தொழில்நுட்பம் –ஒரு பார்வை:


தொழில்நுட்ப வகைகளில் தமிழ் மிக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இடம் என்றால் அது கணினித்துறை தான் என அடித்துச்சொல்லலாம். ஏனெனில் அந்த அளவுக்கு கணினியில் தமிழ் முன்னேற்றம் அடைந்துள்ளது. இவையாவும் கணினித்துறையில் தமிழ்ப்புரட்சியை ஏற்படுத்திய கணினி அறிஞர்களையே சாரும். சாதாரண அலைபேசியில் இருந்து ஐபோன் வரை அனைத்திலும் வந்துவிட்டது. அது மட்டுமா விண்டோசை எடுத்துக்கொண்டால் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பு, இணைய உலாவி, அஞ்சல் என முழுக்கணினியையும் தமிழிலும் காணும் வகையில் தொழில்நுட்பம் வந்துவிட்டது.

Thursday 12 June 2014

கலி லினக்ஸ்-நிறுவும் முறை

கலி லினக்ஸ் என்பது டெபியனை அடிப்படையாகக் கொண்ட இயங்குதளமாகும். இது ஹேக்கிங்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட லினக்ஸ் வழங்கி. இப்போது கலி லினக்சினை எப்படி கணினியில் விண்டோசுடன் டுயல் பூட் முறையில் நிறுவுவது என்பதைக் காணலாம்.

 படி 1:
      முதலில் கீழ்க்காணும் இணைப்பில் சென்று kali 32 bit ISOவை டோரண்டிலோ அல்லது நேரடியாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
          
http://www.kali.org/downloads/
படி 2:
        பின் உங்கள் பென்டிரைவினை கணினியுடன் செருகிக் கொள்ளுங்கள். பின் Linux Live USB எனும் மென்பொருளை உங்கள்

லினக்ஸ் அறிவோம்


விண்டோசை போன்று லினக்சும் ஒரு இயங்குதளமே. லினக்ஸ் இயங்குதளமானது யுனிக்சை சார்ந்து வடிவமைக்கப்பட்டது.
அது என்னங்க யுனிக்ஸ் ? யுனிக்ஸ் என்பதுவும் ஒரு வகை இயங்குதளமே. நீங்க அதிகமா கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதானுங்க ஆப்பிள் போன். ரொம்ப ரிச்சான போன். அதுவும் யுனிக்சின் அடிப்படையில் தானுங்க இயங்குது.
லினக்ஸ் திறவுமூல மென்பொருளின் கீழ் வருவதால் இதனை யார் வேண்டுமானாலும் திருத்தி மறுவடிவம் பெற செய்யலாம். மேலும் இது முழுக்க முழுக்க இலவசம். இதன் காரணமாகவே இன்று லினக்ஸ் பல வழங்கல்களை பெற்றுள்ளது. உதாரணமாக உபுண்டு, ஃபெடோரா இன்னும் பல இயங்குதளங்களைக் கூறலாம்.



விண்டோசைக் காட்டிலும் லினக்ஸின் சில உயர்ந்த பண்புகள்:

பார்டீசியன் பிரிக்கும் முறை


ஒன்றுக்கும் மேற்பட்ட வட்டுக்களை உருவாக்க பார்டீசியன் முறை உதவும். புதிதாக லினக்ஸ் இயங்குதளம் நிறுவ வேண்டுமென்றாலும் நாம் பார்டீசியன் பிரித்துத் தான் ஆக வேண்டும். லினக்ஸ் இயங்குதளம் நிறுவும் முறை பற்றி பிரிதொரு பதிவில் காணலாம். இப்போது எப்படி பார்டீசியன் பிரிப்பது என்று பார்ப்போம்.
இயல்பாகவே பார்டீசியன் பிரிக்க Disk manager எனும் மென்பொருள் விண்டோஸ் 7, விஸ்டா மற்றும் 8இல் அமைந்திருக்கும். இதற்காக நாம் புதிதாக எந்த மென்பொருளையும் கணினியில் நிறுவத்தேவையில்லை.
  • முதலில் உங்கள் கணினியை இடப்பக்கமாக சுட்டி, அதில் Manageஐ தேர்ந்தெடுங்கள்.
  • பின் வரும் விண்டோவில் Storageஐ இருமுறை சுட்டினால் Disk Managementஇ தேர்ந்தெடுங்கள்.

Friday 6 June 2014

நமக்கு பிடித்த வகையில் அஞ்சல் முகவரியை அமைத்துக் கொள்ள

நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் அஞ்சல் என்றால் அது ஜிமெயில் வசதியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் நமக்கு விருப்பமான முகவரியில் அஞ்சல் முகவரியை வைப்பதென்பது அவ்வளவு எளிமையில் கிடைத்து விடாது.ஜீமெயிலைக்காட்டிலும் மிக அற்புதமான யாராலும் அறிந்திராத வகையில் ஒரு மின்னஞ்சல் சேவைத் தளம் உள்ளது.
அது தான் www.mail.com எனும் அஞ்சல் சேவையாகும். இதன் சிறப்புகள் பின் வருமாறு,

  • நமக்கு பிடித்த வகையில் நமது அஞ்சல் டொமைனை வைக்க இதில் வசதி உள்ளது. உங்களின் தொழிலிற்கு ஏற்பவும், பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவாறும் அமைத்துக் கொள்ளலாம்.
  • எல்லையற்ற கொள்ளளவு வசதி.